ஹயகிரீவா ரெசிபி /சென்னா தால் அல்வா ரெசிபி /ஹயகிரீவா மேடி ரெசிபி
INGREDIENTS
கொண்டைக்கடலை - 1 கப்
தண்ணீர் - 3 கப்
வெல்லம் - 2 கப்
பாப்பி விதைகள் - 11/2 டேபிள் ஸ்பூன்
நெய் - 9 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்
வறண்ட தேங்காய் துருவல் - 3/4 பெளல்
உடைத்த முந்திரி பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
கிராம்பு - 4-5
ஏலக்காய் பொடி - 21/2 டேபிள் ஸ்பூன்
Red Rice Kanda Poha
Save PRINT
HOW TO PREPARE
1. ஒரு பெளலில் கொண்டைக்கடலையை எடுத்துக் கொள்ள வேண்டும்
2. 2 கப் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
3. ஊற வைத்த கொண்டைக்கடலையை ஒரு பிரஷர் குக்கரில் எடுத்து
கொள்ளவும்
4. இப்பொழுது 1/2 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
5. 4-5 விசில் அடிக்கும் வரை கொண்டைக்கடலையை குக்கரில் வேக வைத்து காற்று போகும் வரை காத்திருக்க வேண்டும்.
6. குக்கரின் மூடியை திறந்து கொண்டைக்கடலையை நசுக்கி வெந்துள்ளதா என்பதை பார்த்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
7. அடுப்பில் கடாயை வைத்து சூடேற்றி வெல்லத்தை சேர்க்க வேண்டும்
8. உடனடியாக 1/2 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
9. மிதமான தீயில் வெல்லம் முழுவதுமாக கரையும் வரை காத்திருந்து 5-7 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
10. வேக வைத்த கொண்டைக்கடலையை இந்த வெல்ல பாகுவில் சேர்க்க வேண்டும்.
11. நன்றாக கலக்கவும்
12. இப்பொழுது பாப்பி விதைகளை சேர்த்து கலக்கவும்
13. 3 டேபிள் நெய் சேர்க்க வேண்டும்
14. இப்பொழுது 15 நிமிடங்கள் சமைக்க வேண்டும்
15. அப்புறம் உலர்ந்த பழங்கள் மற்றும் தேங்காய் துருவல் சேர்க்க வேண்டும்.
16. மறுபடியும் ஒரு 5 டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும்
17. இப்பொழுது இதை 2 நிமிடங்கள் சமைக்க வேண்டும்
18. பிறகு மற்றொரு சின்ன கடாயை அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன்
நெய் ஊற்ற வேண்டும்
19. உடைத்த முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும்
20. பிறகு கிராம்பை சேர்க்கவும்
21. வறுத்த முந்திரி பருப்பு கலவையை கொண்டைக்கடலை வெல்ல பாகுவில் சேர்க்கவும்.
22. இப்பொழுது ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்
23. சூடாக பரிமாறவும்
INSTRUCTIONS
1.கொண்டைக்கடலையை ஊற வைக்கும் போதே மென்மையான பதத்திற்கு ஊற வைத்துக் கொண்டால் வேக வைக்க எளிதாக இருக்கும்.
2.தேங்காய் துருவல் விருப்பத்திற்கு ஏற்ப சேர்க்கலாம் அல்லது சேர்க்காமலும் இருக்கலாம்.
3.பாப்பி விதைகளும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்து கொள்ளலாம்.
NUTRITIONAL INFORMATION
பரிமாறும் அளவு - 1கப்
கலோரிகள் - 256.9 கலோரிகள்
கொழுப்பு - 11.4 கிராம்
புரோட்டீன் - 21.1 கிராம்
கார்போஹைட்ரேட் - 61 கிராம்
சுகர் - 24.8 கிராம்
நார்ச்சத்து - 6.2 கிராம்
No comments:
Post a Comment