Hyderabad Style Masood Tal (ஹைதராபாத் ஸ்டைல் மசூர் தால் )
* மசூர் பருப்பு - 1 கப் * நெய் - 1 டேபிள் ஸ்பூன் * பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது) தக்காளி பூண்டு சட்னி * இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது) * பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) * வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) * தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) * மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் * மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் * உப்பு - சுவைக்கேற்ப * கொத்தமல்லி - சிறிது செய்முறை: * முதலில் மசூர் பருப்பை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். * பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். * பின் அதில் தக்காளியை சேர்த்து, உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். * பிறகு
அதில் கழுவிய மசூர் பருப்பை சேர்த்து, 1 1/2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி, 2 விசில் விட வேண்டும். விசில் வந்ததும் தீயைக் குறைத்து 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கவும். * விசில் போனதும் குக்கரைத் திறந்து, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பையும் சேர்த்து கலந்து, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ஹைதராபாத் ஸ்டைல் மசூர் தால் தயார்.
No comments:
Post a Comment