Ganesha Chaturthi Special: Amini Pudding (விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: அம்மினி கொழுக்கட்டை ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday 4 September 2021

Ganesha Chaturthi Special: Amini Pudding (விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: அம்மினி கொழுக்கட்டை )



Ganesha Chaturthi Special: Amini Pudding (விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: அம்மினி கொழுக்கட்டை )



தேவையான பொருட்கள்: .

மாவிற்கு... தக்காளி பூண்டு சட்னி * இடியாப்ப மாவு - 1/2 கப் * நல்லெண்ணெய் - 1/2 டீஸ்பூன் * உப்பு - சுவைக்கேற்ப முட்டை மலாய் மசாலா * தண்ணீர் - தேவையான அளவு தாளிப்பதற்கு... * எண்ணெய் - 2 டீஸ்பூன் * கடுகு - 1/2 டீஸ்பூன் * உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன் * பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை * கறிவேப்பிலை - சிறிது * வரமிளகாய் - 2 * துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன் * உப்பு - சுவைக்கேற்ப 


செய்முறை: *


 ஒரு பௌலில் இடியாப்ப மாவு, உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். * பின் நீரை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும். * பின்பு அந்த சூடான நீரை இடியாப்ப மாவில் ஊற்றி, கரண்டி பயன்படுத்தி நன்கு கிளறி விட வேண்டும். * பின் அதை தட்டால் ஒரு 5 நிமிடம் மூடி வைத்து குளிர வைக்க வேண்டும். பின் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, மூடியைத் திறந்து, கையால் மாவை நன்கு மென்மையாக பிசைய வேண்டும். * பிறகு இட்லி தட்டை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைக்க வேண்டும். * பின் இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, நீர் கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை பாத்திரத்தினுள் வைத்து, மூடி வைத்து பத்து நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். * அதே வேளையில் மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும் * பின் இட்லி தட்டில் வேக வைத்துள்ள கொழுக்கட்டைகளை கடாயில்  போட்டு ஒருமுறை கிளறி, மேலே துருவிய தேங்காயை சேர்த்து, வேண்டுமானால் சிறிது உப்பு சேர்த்து கிளறி இறக்கினால், அம்மினி கொழுக்கட்டை தயார்.

No comments:

Post a Comment