hotel-style-channa-kurma ஹோட்டல் ஸ்டைல் சன்னா குருமா - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Wednesday, 15 September 2021

hotel-style-channa-kurma ஹோட்டல் ஸ்டைல் சன்னா குருமா

Hotel Style Channa Kurma Recipe In Tamil

ஹோட்டல் ஸ்டைல் சன்னா குருமா

தேவையான பொருட்கள்:

* சன்னா/கொண்டைக்கடலை - 1 கப்

* வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 1/2 கப் (நறுக்கியது)

* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்


* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

* கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* பட்டை - 1 இன்ச்

* கிராம்பு - 1

* ஏலக்காய் - 1

* அன்னாசிப்பூ - 1

* கறிவேப்பிலை - சிறிது

அரைப்பதற்கு...

* தேங்காய் - 1/2 கப்

* இஞ்சி - 1/2 இன்ச்

* ஏலக்காய் - 1


* பட்டை - 1/4 இன்ச்

* கிராம்பு - 1

* பூண்டு - 1 பல்

* சீரகம் - 1/2 டீஸ்பூன்

* சோம்பு - 1 டீஸ்பூன்

* மிளகு - 10

* பச்சை மிளகாய் - 1

* முந்திரி - 10

செய்முறை:

* முதலில் சன்னாவை சுடுநீரில் 4-5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை குக்கரில் போட்டு போதுமான அளவு நீரை ஊற்றி 5 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு மிக்ஸர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, சிறிது நீர் ஊற்றி, அத்துடன் சிறிது வேக வைத்துள்ள சன்னாவை போட்டு, பேஸ்ட் போல் மென்மையாக நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.


* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

* பின் அதில் வெங்காயம், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக நன்கு வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு மென்மையாக வதக்கவும்.

* பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து ஒருமுறை வதக்கி, அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து கிளறி, 1 கப் நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* குருமாவின் மேலே எண்ணெய் மிதக்க ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்துவிட்டு, குருமாவின் மேலே கொத்தமல்லியைத் தூவி ஒருமுறை கிளறினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் சன்னா குருமா ரெடி!

No comments:

Post a Comment