செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்
தேவையான பொருட்கள்:
* ஆட்டு மூளை - 1
* சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* மல்லி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 1
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஆட்டு மூளையை நன்கு நீரில் கழுவிக் கொள்ளவும்.
பின் மூளையில் உள்ள சிவப்பு நரம்புகளை நீக்கிவிட்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, மீண்டும் நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மூளையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* இப்போது மிக்ஸர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* பின் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து நறுக்கி வைத்துள்ள மூளைய
ை போட்டு, 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
* பின்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 1/4 கப் நீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும். மசாலாவில் பச்சை வாசனை போனதும், அதேப் போல் நீர் வற்றியதும், கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல் தயார்.
குறிப்பு:
* ஆட்டு மூளை வேகமாக வெந்துவிடும். எனவே நீண்ட நேரம் வேக வைக்க வேண்டிய அவசியம் இருக்காது.
* ஆட்டு மூளை மிகவும் மென்மையாக இருப்பதால், சமைக்கும் போது பார்த்த
ு கையாளுங்கள்.
* மேலே மிதமான அளவில் தான் காரம் சேர்க்கப்பட்டுள்ளது. உங்களுக்கு காரமாக வேண்டுமானால், 2 வரமிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment