சிம்பிளான... குடைமிளகாய் பொரியல்
தேவையான பொருட்கள்:
* குடைமிளகாய் - 2
* தக்காளி - 3
பெரிய வெங்காயம் - 1
* குழம்பு மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகப்பொடி - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் குடைமிளகாயை ஓரளவு நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் வெங்காயம் மற்றும் தக்காளியையும்
நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* பிறகு வெங்காயத்தைப் போட்டு சிறிது உப்பு தூவி 2 நிமிடம் வதக்கவும்.
* அடுத்து தக்காளியையும் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விடவும்.
* தக்காளி நன்கு வதங்கிய பின், குடைமிளகாயை சேர்த்து,
அத்துடன் குழம்பு மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும் சிறிது நீர் தெளித்து, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான குடைமிளகாய் பொரியல் தயார்.
No comments:
Post a Comment