Hot and sweet salad (ஹாட் அண்ட் ஸ்வீட் சாலட் )
தேவையானவை: கேரட் - 1, நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் - கால் கப் கொய்யாப்பழத் துண்டுகள் - கால் கட், வெள்ளரிக்காய் - 1, அன்னாசிப்பழம் - 1 கீற்று விதையில்லாத, பச்சை திராட்சை - 10, பப்பாளி - 1 கீற்று, மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, சர்க்கரை - 1 டீஸ்பூன், தேன் அரை டீஸ்பூன்.
செய்முறை: கேரட், வெள்ளரி இரண்டையும் தோவை நீக்கி வில்லைகளாக்கவும். அன்னாசிப்பழம்
மற்றும் பப்பாளியின்
தோலை நீக்கி துண்டுகளாக நறுக்கவும். பிறகு எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து
திராட்சையுடன் கலந்து, அதில் தேன், உப்பு. மிளகாய்தூள் சேர்த்து கலந்து பரிமாறவும். இனிப்பும்
காரமும் இருப்பதால், புதுச் சுவையுடன் ருசிக்கும் இந்த 'ஹாட் அண்ட் ஸ்வீட்' சாலட்.
No comments:
Post a Comment