Banana flower biryani (வாழைப்பூ பிரியாணி )
நேவையாளனை: பாசுமதி அரிசி - ஒரு கட், வாழைப்பு ஆய்ந்து, நறுக்கியது - ஒரு கப் (மோரில் போட்டு வைக்கவும்), கெட்டித் தயிர் - ஒரு கப் (கடையவும்), மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் - 6, பூண்டுப் பல் - 8, நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை ஈட், கொத்த மல்லித்தழை (ஆய்ந்தது) - 2 டேபிஸ்ஸ்பூன், சிவப்பு காராமணி - கால் கப், பிரிஞ்சி இலை - ஒன்று, பட்டை சிறிய துண்டு, நெய் சிறியூளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைக்கட் தேங்காய்த் துருவல் - கால் சுப், சோம்பு - ஒரு டீஸ்பூன், தோல் சீமிய இஞ்சி - அரை அங்குலத்துண்டு, மிளகு - அரை டீஸ்பூன்.
செய்முறை: சிவப்பு காராமணியை 2 மணி நேரம் ஊறவைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடிக்கவும். வாணவியில் நெய் விட்டு அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். சுாராமணியுடன் உப்பு சேர்த்து அரை வேக்காடு பதத்தில் சேகவிடவும். குக்கரில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை,
காய்ந்த மிளகாய் தாளித்... பூண்டு, வெங்காயம் சேர்ந்து வதக்கி, அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிறைவும். நறுக்கிய வாழைப் பூவை ஒட்டப்பிழிந்து சேர்த்து, வேகவைத்த காராமணியும் சேர்த்து, கடைந்த தயிர் ஊற்றி, தேவையான நீர்விட்டுக் கலக்கவும். ஒரு கொதிவந்ததும் கொத்தமல்லித்தழை தூவி, அரிசியைப் போட்டு, குக் கரை மூடி 2 விசில் வந்து வெந்ததும் இறக்கவும். ஆபி விட்டதும் குக் கரைத் திறந்து, கினறிப் பரிமாறவும்,
No comments:
Post a Comment