சில்லி பன்னீர் கிரேவி
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 3/4 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* குடைமிளகாய் - 1/2 கப் (நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* ஸ்பிரிங் ஆனியனின் வெள்ளைப் பகுதி - 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* ஸ்பிரிங் ஆனியனின் பச்சை பகுதி - 1/2 டேபின் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 1 கப்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
ஊற வைப்பதற்கு..
.
* மைதா - 1 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - பேஸ்ட் செய்ய தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை எடுத்து ஓரளவு கெட்டியான பேட் போல் கலந்து, பன்னீர் துண்டுகளைப் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் இன்னும் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரிங் ஆனியனின வெள்ளைப் பகுதி, இஞ்சி
மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் வெங்காயம் மற்றும் குடைமிளகாயை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ், மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, ஒரு கப் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் எஞ்சியுள்ள மைதா சோள மாவு பேஸ்ட் சேர்த்து, கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து, கிரேவி ஓரளவு கெட்டியாக ஆரம்பித்ததும், அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு கிளறி, மேலே பிரிங் ஆனியனின் பச்சை பகுதியைத் தூவி இறக்கினால், சுவையான சில்லி பன்னீர் தயார்.
No comments:
Post a Comment