கூர்க் ஸ்டைல் காளான் கிரேவி
தேவையான பொருட்கள்:
* காளான் - 500 கிராம் (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* வரமிளகாய் - 2
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பூண்டு - பற்கள்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில், துருவிய தேங்காய், சீரகம் மற்றும் பூண்டு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர்
ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வரமிளகாய், மிளகுத் தூள் சேர்த்து கிளறி, பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய காளானை சேர்த்து நன்கு நீர்விடும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த
ு வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் தக்காளி மற்றும் மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி அரை கப் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
* மிதமான தீயில் கிரேவி நன்கு 5 நிமிடம் கொதித்த பின், கிரேவியை அடுப்பில் இருந்து இறக்கினால், சுவையான கூர்க் ஸ்டைல் காளான் கிரேவி தயார்.
No comments:
Post a Comment