சாக்லேட் இட்லி கேக்
தேவையான பொருட்கள்:
* மைதா - 1/4 கப்
* ரவை - 1/4 கப்
* கொக்கோ பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 1/2 கப்
* சர்க்கரை - 3-4 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் அல்லது பால் - 1/4 கப்
* பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
* வென்னிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில்
இட்லி தட்டில் எண்ணெயைத் தடவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் தயிர், சர்க்கரையை ஒன்றாக எடுத்து, சர்க்கரை கரைந்து நன்கு க்ரீம் போல் ஆகும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் எண்ணெய் மற்றும் வென்னிலா எசன்ஸ் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் ரவையை சேர்த்து நன்கு
கிளறி, பின் கொக்கோ பவுடரை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்னர் நீர்/பால் ஊற்றி கிளறி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின், அதில் பேக்கிங் சோடா மற்றும் மைதாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக அந்த கலவையை எண்ணெய் தடவிய இட்லி தட்டில் ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்தால், சுவையான சாக்லேட் இட்லி கேக் தயார்.
No comments:
Post a Comment