south-indian-style-macaroni(தென்னிந்திய ஸ்டைலில் சுவையான மேக்ரோனி ரெசிபி செய்வது எப்படி?) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Sunday, 26 September 2021

south-indian-style-macaroni(தென்னிந்திய ஸ்டைலில் சுவையான மேக்ரோனி ரெசிபி செய்வது எப்படி?)

South Indian Style Macaroni

தென்னிந்திய ஸ்டைலில் சுவையான மேக்ரோனி ரெசிபி செய்வது எப்படி?

INGREDIENTS
தண்ணீர்-1 லிட்டர்

உப்பு - தேவைக்கேற்ப

மேக்ரோனி- 2 கப்

வெஜிடபிள் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - 10-12

மீடியம் வடிவ வெங்காயம், நறுக்கியது - 1

சிறிய வடிவில் பச்சை மிளகாய் (நறுக்கியது) - 1-2

பீன்ஸ் (சதுர வடிவில் நறுக்கியது மற்றும் வேக வைத்தது ) - 1/4

சாம்பார் மசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன்

வெஜ் மயோனைஸ் - 5 டேபிள் ஸ்பூன்

Red Rice Kanda Poha
Save PRINT
HOW TO PREPARE
ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தண்ணீர் நிரப்பவும்

மிதமான தீயில் அடுப்பில் வைத்து தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்

அதனுடன் 9 கிராம் உப்பு மற்றும் மேக்ரோனிஇரண்டையும் சேர்க்கவும்

மேக்ரோனிபாக்கெட்டில் கொடுத்துள்ள நேரம் அல்லது 5 நிமிடங்கள் வரை சமைக்க வேண்டும்

மேக்ரோனிபாத்திரத்தின் அடியில் ஒட்டாத வண்ணம் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்

ஒரு அகன்ற கரண்டியை எடுத்து 120 மில்லி லிட்டர் பீக்கரில் (கண்ணாடி குடுவை) பாஸ்தாஸ்டோக்கை எடுத்து கொண்டு சமைக்கவும்.

ஒரு வடிகட்டியை கொண்டு சமைத்த பாஸ்தாவில் உள்ள தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.

இப்பொழுது அடி ஒட்டாத ஒரு கடாயை எடுத்து கொள்ளவும்

அடி ஒட்டாமல் இருக்க ஸ்பிரே அல்லது எண்ணெய் பயன்படுத்தி கொள்ளலாம்

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்

நன்றாக வெடித்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பீன்ஸ், காலிபிளவர், சாம்பார் மசாலா, கொஞ்சம் உப்பு சேர்க்க வேண்டும்

நன்றாக கிளறி ஒரு நிமிடம் வரை காய்கறிகளை வேக வைக்கவும்

இப்பொழுது இதனுடன் சமைத்த பாஸ்தாஸ்டோக்கை சேர்க்கவும் மற்றும் நன்றாக கிளறவும்

பிறகு கடாயை அடுப்பில் இருந்து இறக்கி அதனுடன் மயோனைஸ் சேர்த்து கிளறவும்

மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து 1 நிமிடம் வரை குறைந்த தீயில் வைத்து கலவை கெட்டியாகும் வரை சமைக்கவும்

இதனுடன் சமைத்த மக்ரோனியை சேர்த்து நன்றாக கிளறவும்

இப்பொழுது மேக்ரோனிகலவையை ஒரு தட்டில் வைத்து பரிமாறவும். சுவையான தென்னிந்திய ஸ்டைல் மேக்ரோனிரெசிபி ரெடி

INSTRUCTIONS
நீங்கள் விருப்பப்பட்ட காய்கறிகளையும் சேர்த்து பயன்படுத்தி கொள்ளலாம்.
NUTRITIONAL INFORMATION
பரிமாறும் அளவு - 1 கப்
கலோரிகள் - 400 கலோரிகள்
கொழுப்பு - 32 கிராம்
கார்போஹைட்ரேட் - 45 கிராம்
நார்ச்சத்து - 3 கிராம்

No comments:

Post a Comment