ருசியான... சில்லி பன்னீர்
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* குடைமிளகாய் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி சாஸ் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* ஸ்பிரிங் ஆனியன்/கொத்தமல்லி - 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
ஊற வைப்பதற்கு..
.
* மைதா - 1 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் சிறிது ஊற்றி, அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக டோஸ்ட் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி
பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
* பின் அதில் குடைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அடுத்து அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் டோஸ்ட் செய்து வைத்துள்ள பன்னீரைப் போட்டு ஒருமுறை கிளறி விட்டு இறக்கி, மேலே கொத்தமல்லி அல்லது ஸ்பிரிங் ஆனியனைத் தூவினால், சில்லி பன்னீர் ரெடி!
No comments:
Post a Comment