chettinad-style-cauliflower-pepper-fry-recipe(செட்டிநாடு ஸ்டைல் காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday, 25 September 2021

chettinad-style-cauliflower-pepper-fry-recipe(செட்டிநாடு ஸ்டைல் காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை)

Chettinad Style Cauliflower Pepper Fry Recipe In Tamil

செட்டிநாடு ஸ்டைல் காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை

தேவையான பொருட்கள்:

* காலிஃப்ளவர் - 3/4 கப்

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்

* கடுகு - 1/2 டீஸ்பூன்

* பூண்டு - 2 (பொடியாக நறுக்கியது)

* கறிவேப்பிலை - சிறிது

வறுத்து அரைப்பதற்கு...

* பட்டை - 1/4 இன்ச்

* கிராம்பு - 2

* மிளகு - 3/4 டீஸ்பூன்

* சீரகம் - 1/2 டீஸ்பூன்

* மல்லி விதைகள் - 1 டீஸ்பூன்

* வர மிளகாய் - 1

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பாத்திரத்தில் காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு, நீரை ஊற்றி, அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து, 3 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.


* பின்பு நீரை வடிகட்டி விட்டு, அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள பொடியில் பாதியை சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் பூண்டு மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* அடுத்து, அதில் ஊற வைத்துள்ள காலிஃப்ளவரைப் போட்டு 2 நிமிடம் வதக்கி, மீதமுள்ள அரைத்த மசாலா பொடியையும் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி விட்டு இறக்கினால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை ரெடி!


No comments:

Post a Comment