chettinad-mutton-chukka-varuval-recipe(நாவூற செய்யும்... செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday 25 September 2021

chettinad-mutton-chukka-varuval-recipe(நாவூற செய்யும்... செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல்)

Chettinad Mutton Chukka Varuval Recipe In Tamil

நாவூற செய்யும்... செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல்

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் - 1 (பெரியது மற்றும் நறுக்கியது)

* தக்காளி - 4 (நறுக்கியது)

* பச்சை மிளகாய் - 1

* கறிவேப்பிலை - சிறிது


* தண்ணீர் - 1 கப்

ஊற வைப்பதற்கு...

* மட்டன் - 1/2 கிலோ

* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

* கரம் மசாலா - 1 டீஸ்பூன்

* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு...

* தேங்காய் - 1/2 கப்

* கசகசா - 2 டேபிள் ஸ்பூன்

* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு...

* தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

* சோம்பு - 1 டீஸ்பூன்

* பட்டை - 1 துண்டு

* வெங்காயம் - 1 (நறுக்கியது)

* தக்காளி - 1 (நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

* கறிவேப்பிலை - சிறிது

* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)

* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்

* கரம் மசாலா - 1 டீஸ்பூன்

* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் கழுவிய மட்டனைப் போட்டு, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் சேர்த்து பிரட்டி, குறைந்தது 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.


* பின் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு குக்கரை எடுத்து அடுப்பில் வைத்து சூடானதும், 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் ஊற வைத்துள்ள மட்டனையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.

* பின் ஒரு கப் நீரை ஊற்றி கிளறி விட்டு, குக்கரை மூடி 6-7 விசில் விட்ட ு இறக்க வேண்டும்.

* பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* பின்பு அதில் சோம்பு, பட்டை சேர்த்து தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.

* அதன் பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும். இப்போது குக்கரில் உள்ள மட்டனை அப்படியே கடாயில் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* அடுத்து மிளகாய் தூள், மிளகுத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட்டு, அரைத்து வைத்துள்ள தேங்காயையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.

* கிரேவியில் உள்ள நீர் வற்றி நன்கு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்துவிட்டு மேலே கொத்தமல்லியைத் தூவினால், செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல் ரெடி!

No comments:

Post a Comment