bombay-sambar-recipe(பாம்பே சாம்பார்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Friday, 24 September 2021

bombay-sambar-recipe(பாம்பே சாம்பார்)

Bombay Sambar Recipe In Tamil

பாம்பே சாம்பார்

தேவையான பொருட்கள்:

* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி - 1 இன்ச்

* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)

* கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்

* வெல்லம் - 3/4 டீஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* தண்ணீர் - 1 1/2 கப்

* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

* கொத்தமல்லி - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* கடுகு - 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

* சீரகம் - 1 டீஸ்பூன்

* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

* வரமிளகாய் - 1


* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* முதலில் கடலை மாவை நீரில் சேர்த்து கட்டிகள் சேராதவாறு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு அதில் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, வெல்லம் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும். ஒருவேளை தக்காளி முற்றிலும் வற்றியதாக தோன்றினால், அதில் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்.


* தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், கடலை மாவை சேர்த்து கிளறி 4-5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், பாம்பே சாம்பார் தயார்.

No comments:

Post a Comment