சுவையான... மக்ரோனி பாஸ்தா
தேவையான பொருட்கள்:
* மக்ரோனி பாஸ்தா - 1 கப்
* பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
* நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
* நறுக்கிய தக்காளி - 1/2 கப்
* நறுக்கிய குடைமிளகாய் - 1/4 கப்
* தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* சீஸ் - சிறிது (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
மசாலாப் பொடிகள்:
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கறி மசாலா பொடி - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* பிட்சா சீசனிங் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, அதில் பாஸ்தாவைப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும்.
* பின்பு தக்காளியை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக மென்மையாக வதக்க வேண்டும்.
* பின் குடைளிமகாய் சேர்த்து, கறி மசாலா, கரம் மசாலா, மிளகாய் பொடியையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி நன்கு வதக்கி விட வேண்டும்.
* அடுத்து பிட்சா சீசனிங் மற்றும் உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளை சேர்த்து, அத்துடன் தக்காளி சாஸ் சேர்த்து கிளறி, இறுதியில் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து நன்கு ஒருசேர பிரட்டி விட்டு இறக்கி, மேலே துருவிய சீஸைத் தூவினால், சுவையான மக்ரோனி பாஸ்தா தயார்..!
No comments:
Post a Comment