broccoli-65-recipe(ப்ராக்கோலி 65) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday, 25 September 2021

broccoli-65-recipe(ப்ராக்கோலி 65)

Broccoli 65 Recipe In Tamil

ப்ராக்கோலி 65

தேவையான பொருட்கள்:

* ப்ராக்கோலி - 3 கப் (சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

* கரம் மசாலா - 1 டீஸ்பூன்

* அரிசி மாவு - 1/2 கப்

* மைதா - 1/4 கப்

* சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்

* பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

* தண்ணீர் - தேவையான அளவு

* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி அதில் நறுக்கிய ப்ராக்கோலியைப் போட்டு அடுப்பில் வைத்து, சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் நீரை வடிகட்டி விட்டு, ப்ராக்கோலியை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் எண்ணெய் தவிர, மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

* இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* எண்ணெயானது சூடானதும், மசாலாக்கள் போட்டு பிரட்டி வைத்துள்ள ப்ராக்கோலியைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான ப்ராக்கோலி 65 ரெடி!

No comments:

Post a Comment