பாதுஷா கச்சிதமா வீட்டிலேயே செய்வது எப்படி? இதை ட்ரை பண்ணிப் பாருங்க!!- பொங்கல் ஸ்பெஷல்
INGREDIENTS
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/4 டேபிள் ஸ்பூன்
மைதா - 1 கப்
சர்க்கரை - 11/4 கப்
தண்ணீர் - 1/4 கப்
கொத்தமல்லி பொடி - 1/4 டேபிள் ஸ்பூன்
Red Rice Kanda Poha
Save PRINT
HOW TO PREPARE
ஒரு பெளலில் நெய்யை எடுத்து கொள்ளவும்
தயிரை அதனுடன் சேர்க்கவும்
அதனுடன் பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்க்கவும்
நன்றாக கலக்கவும்
அதனுடன் 1 கப் மைதா மாவை சேர்த்து நன்றாக கலக்கவும்
கைகளில் ஒட்டாத வண்ணம் மிதமான பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளவும்
கொஞ்சம் மாவை எடுத்து உங்கள் உள்ளங்கைகளால் தட்டையான பந்து மாதிரி தட்டிக் கொள்ளவும்
பல் குத்தும் குச்சியை கொண்டு நடுவில் லேசாக அழுத்தி விடவும்
பொரிப்பதற்கு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்
ஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு பொரிக்க வேண்டும். அவைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்
குறைந்த தீயில் வைத்து பொரித்தெடுக்க வேண்டும்.
ஒரு பக்கம் பொரிந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு பொரிக்க வேண்டும்
பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும். பிறகு ஆற வைக்கவும்
அதே நேரத்தில் அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரையை சேர்க்க வேண்டும்
உடனே தண்ணீர் ஊற்றவும்
சர்க்கரை நன்றாக கரையும் வரை 2 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும்
பிறகு ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்
இப்பொழுது பொரித்தெடுத்த பாதுஷாவை எடுத்து சர்க்கரை பாகுவில் ஊற வைக்க வேண்டும்
10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும்
பிறகு ஊற வைத்த பாதுஷாவை ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆற வைக்க வேண்டும்
சர்க்கரை பாகு நன்றாக உறைந்ததும் பாதுஷாவை பறிமாறவும்.
INSTRUCTIONS
மாவின் பதம் மிகவும் முக்கியம். எனவே சரியான அளவு பொருட்களை கலந்து சரியான பதத்தில் பிசைய வேண்டும்.
மாவின் பதம் ரெம்ப மென்மையாக இருந்தால் அதனுடன் இன்னும் கொஞ்சம் மைதாவை சேர்த்து கொள்ளவும். ரெம்ப கெட்டியான பதமாக இருந்தால் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
அதிகமான அல்லது மிதமான தீயில் பாதுஷாவை பொரித்தால் சீக்கிரம் பொன்னிறமாக மாறி உள்ளே வேகாமல் இருக்கும். எனவே குறைந்த தீயில் பொரிப்பது முக்கியம்.
NUTRITIONAL INFORMATION
பரிமாறும் அளவு - 1 பாதுஷா
கலோரிகள் - 178 கலோரிகள்
கொழுப்பு - 5 கிராம்
புரோட்டீன் - 2 கிராம்
கார்போஹைட்ரேட் - 38 கிராம்
சர்க்கரை - 25 கிராம்
No comments:
Post a Comment