Zucchini Delight in Tomato and Cheese (சீமை சுரைக்காய் டிலைட் இன் டொமேட்டோ அண்ட் சீஸ் )
சாஸ்
தேவையான பொருட்கள்: சின்ன துண்டுகளாக நறுக்கிய சீமை சுரைக்காய்--(196 கிராம்), நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் -- 1, விழுதாக அரைத்த தக்காளி - 1, வெண்ணெய் - 50 கிராம், துருவிய கெட்டி சீஸ் - 50 கிராம், மிளகுத்தூள் - 1 மேஜைக்கரண்டி, மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி, ஏதாவது ஹெர்ப்ஸ் - 1 தேக்கரண்டி, தேங்காய் பால் - 1 கப், முந்திரி - 5 அரைத்த விழுது, உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி - சிறிதளவு, வெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி.
செய்முறை: சீமை சுரைக்காயை வெண்ணெய், உப்பு சேர்த்து கிரில் செய்யவும். அதேபோல வெங்காயம், வெண்ணெய் சேர்த்து கிரில் செய்யவும். கிரில் இல்லையென்றால் வாணலியில் தனியாக வதக்கலாம். அரைத்த தக்காளி விழுதுடன் மிளகாய் தூள், உப்பு கலந்து வெண்ணெய் விட்டு வதக்கி வைக்கவும் (தக்காளி சாஸ்). வாணலியில் வெண்ணெய் சேர்த்து அரைத்த முந்திரி விழுதை வதக்கி அதில் துருவிய சீஸ் மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து கொஞ்சம் உப்பு, மிளகுத்தூள் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடவும் (சீஸ் சாஸ்). ஏதாவது ஹெர்ப்ஸ், ஒரு பாத்திரத்தில் முதலில் இந்த சீஸ் சாஸ் கலவை, அதன்மேல் கிரில் செய்த சீமை சுரைக்காய், அதன் மேல் கிரில் செய்த வெங்காயம் என்று அடுக்கி மேலே தக்காளி சாஸ் விட்டு கொத்தமல்லித் தழை அலங்கரித்து அதன் மேலே கொஞ்சம் ஹெர்ப்ஸ் தூவி அலங்கரிக்கவும்.சாப்பிடும் முன் எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.
-டாலி பாலா
பரிமாறும் அளவு: 4
மொத்த கலோரி: 1882, புரதம்: 30, கொழுப்பு: 169, மாவுச்சத்து: 57.0, மாவுச்சத்து: 35.

No comments:
Post a Comment