Cabbage biryani (முட்டைகோஸ் பிரியாணி ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Sunday, 8 August 2021

Cabbage biryani (முட்டைகோஸ் பிரியாணி )

Cabbage biryani  (முட்டைகோஸ் பிரியாணி  )


தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் -- -1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, காய்கறிகள் (கேரட். புடலை, சௌசௌ, நூக்கோல், புதினா) - 100 கிராம், முட்டைகோஸ் - 100 கிராம் (கேரட் சீவும் சீவீயில் துருவிக் கொள்ள வேண்டும்), நெய் - 2 மேஜைக்கரண்டி, பட்டை, கிராம்பு, சோம்பு - தலா 1 தேக்கரண்டி, பிரியாணி மசாலா - 2 தேக்கரண்டி, எலுமிச்சைச்சாறு - 1 தேக்கரண்டி.

செய்முறை: குக்கரில் சிறிது நெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, வெங்காயம், தக்காளி இஞ்சி பூண்டு விழுது, பிரியாணி மசாலா, காய்கறிகள், முட்டைகோஸ், உப்பு போட்டு வதக்கவும். நீர் ஊற்ற வேண்டாம். காய்கறிகளில் உள்ள நீரே போதும். அடுப்பை சிம்மில் வைக்கவும். 2 விசில் வரும் வரை வேகவிடவும். தம் அடங்கிய பின் குக்கரை திறந்து எலுமிச்சைச்சாறு விட்டு இறக்கவும்.

சுப்புலஷ்மி

பரிமாறும் அளவு: 1

மொத்த கலோரி: 363, புரதம்: 10, கொழுப்பு: 20, மாவுச்சத்து: 35.

No comments:

Post a Comment