Young Water - Dry Fruits Biryani (இளநீர் - ட்ரை ஃப்ரூட்ஸ் பிரியாணி )
தேவையானவை - பாகமதி அரிசி - ஒரு கப், இளநீர் - 2 கப், காய்ந்த திராட்சை, பேரீச்சை (கொட்டை நீக்கவும்), உலர் அத்திப்பழம் (சேர்த்து) - ஒரு கப், உரித்த முலாம்பழ விதை - ஒரு டீஸ்பூன், சர்க்கரை சேர்க்காத கோவா - 50 கிராம், பனீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், நெய் - தேவையான அளவு, ஏலக்காய் - 3, செர்ரி, டூட்டி ஃப்ரூட்டி (சேர்த்து) - 2 டேபிள்ஸ்பூன், பிஸ்தா - ஒரு டேபிள்ஸ்பூன் (குருவியது, கேசரி கயர் அல்லது விருப்பமான ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை.
செய்முறை: அரிசியை 10 நிமிடங்கள் நீரில் ஊறவைத்து வடிகட்டவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொண்டு, நீருக்குப் பதில் இளநீர் விட்டு வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். வாணலியில் நெய்யைக் காயவிட்டு காய்ந்த திராட்சை, பேரீச்சை, உலர் அத்திப்பழம் உரித்த முலாம்பழ விதை, செர்ரி, டூட்டி ஃப்ரூட்டி, ஏலக்காய் சேர்த்து வதக்கவும், இதனுடன் பனீர் துருவல், உநிர்த்த கோளா, கேசரி கலர் (அ) விருப்பமான ஃபுட் கலர் சேர்த்துக் கிளறி, வெந்த சாதத்தைப் போட்டு மேலும் கிளறி இறக்கவும்,
துருவிய பிஸ்தாவை மேலே தூவி அலங்கரிக்கவும்,
குறிப்பு: உலர் அத்திப்பழத்தை நீரில் 15 நிமிடங்கள் ஊறவைக்க
வும், பேரீச்சையைக் கொட்டை நீக்கி, நறுக்கிக்கொள்ளவும்..
No comments:
Post a Comment