Kadamba Biryani (கதம்ப பிரியாணி )
தேவையானவை: பாசுமதி அரிசி, நறுக்கிய நக்காளி - தலா ஒரு கப், ஆய்ந்த முளைக்கீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை (சேர்த்து) - ஒரு கப், முளைகட்டிய பயறு - அரை கப் (பச்சைப் பயறு, கேழ்வற்கு, உளுந்து போன்றவை!, நறுக்கிய வெங்காயம் - அரை கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிளஸ்யூன், பட்டை, கிராம்பு, சோம்பு (சேர்த்து) - ஒரு டேபின்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - 5 (விழுதாக அரைக்கவும்), பிரியாணி இலை - ஒன்று, கொத்தமல்லித்தழை, தேங்காய்த் துருவல் - அலங்கரிக்கத் தேவையான அளவு, எண்ணெய், நெய், உப்பு - சிறிதளவு.
செய்முறை: அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்கவும். யாணலியில் சிறிது நெய்விட்டுச் சூடாக்கி அரிசியை சில நிமிடங்கள் வறுக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை கிராம்பு, சோம்பு, தாளித்... வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, ஆய்ந்த கீரைகளையும் போட்டு வதக்கி, மஞ்சள்தூள், பச்சை மிளகாய் விழுது சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கிளறி, உப்பு, முளைக்கட்டிய பயறு
சேர்த்துக் கலந்து, சிறிதளவு நீர் தெளித்து, மூடி வைத்து வேகவிடவும். பிறகு, தேவையான நீர் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் அரிசி சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும். பிறகு தேங்காய்த் துருவல், ஆய்ந்த கொத்தமல்லித்தழை தூவிக் கிளறி பரிமாறவும்.
No comments:
Post a Comment