vegetable curuma (சுதந்திர தின ஸ்பெஷல்: பன்னீர் வெஜிடேபிள் குருமா) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Monday 16 August 2021

vegetable curuma (சுதந்திர தின ஸ்பெஷல்: பன்னீர் வெஜிடேபிள் குருமா)


தேவையான பொருட்கள்:

* பன்னீர் - 1/2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)

* வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)

* கேரட் - 2 (பொடியாக நறுக்கியது)

* பட்டாணி - 1 கையளவு

* இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

* கொத்தமல்லி - சிறிது

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* கிராம்பு - 2

* பட்டை - 1 துண்டு

அரைப்பதற்கு...

* தேங்காய் - 1/2 கப்

* பச்சை மிளகாய் - 2

* சோம்பு - 1/2 டீஸ்பூன்

* முந்திரி - 5

* வெங்காயம் - 1 (நறுக்கியது)

செய்முறை:

* முதலில் குக்கரில் கேரட் மற்றும் பட்டாணியைப் போட்டு சிறிது நீர் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதே தவாவில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, பின் தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் அரைப்பதற்கு கொடுத்துள்ள பிற பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 1/2 முதல் 3/4 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 3 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் குக்கரில் வேக வைத்துள்ள காய்கறிகள் மற்றும் பன்னீரை சேர்த்து, குறைவான தீயில் 5-7 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பன்னீர் வெஜிடேபிள் குருமா தயார்.

குறிப்பு:

* பன்னீரை வதக்காமலும் பயன்படுத்தலாம்.

* அரைக்கும் போது வேண்டுமானால், தக்காளியையும் சேர்த்து வதக்கி அரைத்துக் கொள்ளலாம்.

* ஃப்ளேவருக்கு வேண்டுமானால் ஒரு டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்துக் கொள்ளலாம்.

* இந்த குருமாவுடன் உருளைக்கிழங்கு, பீன் என எந்த காய்கறியையும் சேர்த்துக் கொள்ளலாம்.





No comments:

Post a Comment