kerala recipe(கேரளா ஓணம் சத்யா ஸ்பெஷல்: ஓலன் ரெசிபி) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Monday, 16 August 2021

kerala recipe(கேரளா ஓணம் சத்யா ஸ்பெஷல்: ஓலன் ரெசிபி)



கேரளா ஓணம் சத்யா ஸ்பெஷல்: ஓலன் ரெசிபி


தேவையான பொருட்கள்:

* நீர் பூசணி/வெள்ளை பூசணி - 1 1/2 கப்

* தட்டைப்பயறு - 1-2 கப்

* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)

* மிகவும் நீர் போன்ற தேங்காய் பால் - 1 கப்

* கெட்டியான தேங்காய் பால் - 1 கப்

* கறிவேப்பிலை - சிறிது

* தேங்காய் எண்ணெய் - 1 டீபூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் நீர் பூசணிக்காயின் தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் தட்டை பயறை நீரில் ஒரு 8 மணிநேரம் ஊற வைத்துக் கொண்டு, பின் அதை குக்கரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* ஒரு பாத்திரத்தில் அரை கப் நீர் ஊற்றி, அத்துடன் ஒரு கப் நீர் போன்றுள்ள தேங்காய் பால் ஊற்றி, அதோடு நீர் பூசணிக்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அடுப்பில் வைத்து, காயை நன்கு வேக வைக்க வேண்டும்.

* நீர் பூசணி நன்கு வெந்ததும், அத்துடன் வேக வைத்துள்ள தட்டை பயறை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, பின் கெட்டி தேங்காய் பாலை ஊற்றி, கொதிக்க ஆரம்பிக்கும் முன்பே அடுப்பை அணைத்து விட வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் ஊற்றினால், ஓணம் சத்யா ஸ்பெஷல் ஓலன் தயார்.

குறிப்பு:

* நீர் பூசணிக்காய் மற்றும் தட்டைப் பயறு நன்கு மென்மையாக வெந்திருந்தால் தான், அது தேங்காய் பாலை நன்கு உறிஞ்சியிருக்கும்.

* கெட்டியான தேங்காய் பால் சேர்த்த பின் நீண்ட நேரம் அடுப்பில் வைத்திருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது திரிய ஆரம்பித்துவிடும்.

* ஒருவேளை தட்டை பயறை ஊற வைக்க மறந்துவிட்டால், நன்கு கொதிக்கும் சுடுநீரை தட்டை பயறை சேர்த்து, ஒரு தட்டு கொண்டு மூடி குறைந்தது ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் குக்கரில் போட்டு வேக வைத்து எடுக்கலாம்.

* சமைத்து முடித்த பின் குறைந்தது அரை மணிநேரம் கழித்து சாப்பிட பரிமாறினால் தான், தேங்காய் பாலுடன் காய்கறிகள் நன்கு ஊறி இருக்கும்.

* ஓலன் ரெசிபிக்கு நீர் பூசணியுடன், மஞ்சள் பூசணியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment