cheese chinese bakoda (சீஸி சைனீஸ் பனானா டோஃபி ஃபிரிட்டர்ஸ்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Monday 16 August 2021

cheese chinese bakoda (சீஸி சைனீஸ் பனானா டோஃபி ஃபிரிட்டர்ஸ்)



சீஸி சைனீஸ் பனானா டோஃபி ஃபிரிட்டர்ஸ்


சீஸி சைனீஸ் பனானா டோஃபி ஃபிரிட்டர்ஸ்

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் சுவையான மற்றும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஃபிரிட்டர்ஸ் செய்து கொடுங்கள். அதுவும் வாழைப்பழத்தைக் கொண்டு செய்யக்கூடிய சீஸி சைனீஸ் பனானா டோஃபி ஃபிரிட்டர்ஸ் செய்து கொடுங்கள். இந்த ஃபிரிட்டர்ஸ் செய்வது மிகவும் சுலபம்.


உங்களுக்கு சீஸி சைனீஸ் பனானா டோஃபி ஃபிரிட்டர்ஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சீஸி சைனீஸ் பனானா டோஃபி ஃபிரிட்டர்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தேவையான பொருட்கள்:

* மைதா - 3 டேபிள் ஸ்பூன்

* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

 சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்

* சீடர் சீஸ் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)

* கனிந்த வாழைப்பழம் - 2 (துண்டுகளாக்கப்பட்டது)

 எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

* சர்க்கரை - 3/4 கப்

* வெள்ளை எள்ளு விதைகள் - 1 1/2 டேபிள் ஸ்பூன் (வறுத்தது)

* குளிர்ந்த நீர் - 100 மிலி

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் மைதா, அரிசி மாவு மற்றும் சோள மாவை எடுத்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த மாவை சிறிது எடுத்து, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு பௌலில் உள்ள மாவு கலவையில் துருவிய சீடர் சீஸ், ஒரு டேபிள் ஸ்ஸ்பூன் எண்ணெய் மற்றும் சிறிது நீர் ஊற்றி, நன்கு மென்மையாக கலந்துக் கொள்ள வேண்டும்.


* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* வாழைப்பழத் துண்டுகளை தனியாக எடுத்து வைத்துள்ள மாவில் பிரட்டி, பின் கலந்து வைத்துள்ள மாவு கலவையில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு பேனில் சர்க்கரையைப் போட்டு அடுப்பில் வைத்து, நன்கு ப்ரௌன் நிறத்தில் மாறும் வரை கிளறி, கேரமல் தயாரித்து இறக்க வேண்டும்.

* அப்படி இறக்கிய உடனேயே பொரித்து வைத்துள்ள வாழைப்பழத் துண்டுகளை, சூடான கேரமலில் பிரட்டி, அதை குளிர்ந்த நீரில் உடனே நனைத்து எடுத்து, பின் அதை வறுத்த எள்ளு விதையில் பிரட்டி எடுத்தால், சீஸி சைனீஸ் பனானா டோஃபி ஃபிரிட்டர்ஸ் தயார்.

No comments:

Post a Comment