vazhaipoo-vadai-recipe-in-tamil(வாழைப்பூ வடை) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Monday 16 August 2021

vazhaipoo-vadai-recipe-in-tamil(வாழைப்பூ வடை)





வாழைப்பூ வடை

மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் டீ, காபி குடிக்கும் போது சூடாகவும், காரமாகவும் எதையேனும் சாப்பிட கேட்கிறார்களா? அப்படியானால் காபி, டீ குடிக்கும் போது சாப்பிட வடை தான் பொருத்தமாக இருக்கும். அதுவும் உங்கள் வீட்டில் வாழைப்பூ இருந்தால், அதைக் கொண்டு சுவையான ஒரு வடை செய்யுங்கள். இந்த வடை மிகவும் ருசியாக, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.


உங்களுக்கு வாழைப்பூ வடை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைப்பூ வடையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கடலை பருப்பு - 1/4 கப்

* துவரம் பருப்பு - 1/4 கப்
* வாழைப்பூ - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

* சோம்பு - 1 டீஸ்பூன்* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

* சின்ன வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

* பூண்டு - 3-4 (பொடியாக நறுக்கியது)

* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)

* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

* உப்பு - சுவைக்கேற்ப

* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் கடலைப் பருப்பு மற்றும் துவரம் பருப்பை சுடுநீரில் போட்டு அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* பின்னர் வாழைப்பூவை பொடியாக நறுக்கி, அதை மோரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு பருப்புகள் நன்கு ஊறியதும், அதை பிளெண்டரில் போட்டு ஓரளவு அரைத்துக் கொள்ள வேண்டும்.


* பிறகு அரைத்த பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் மோரில் ஊற வைத்துள்ள வாழைப்பூவைப் பிழிந்து சேர்த்துக் கொள்ளவும்.

* அதன் பின் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், சோம்பு, பெருங்காயத் தூள், நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள கலவையை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து தட்டிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான வாழைப்பூ வடை தயார்.

No comments:

Post a Comment