ரெஸ்டாரண்ட் ஸ்டைல்.. தந்தூரி ஆலு கிரேவி
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் + தேவையான அளவு
* நெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* முந்திரி - 10
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
ஊற வைப்பதற்கு...
* பேபி உருளைக்கிழங்கு - 25
* தயிர் - 1 கப்
* தந்தூரி மசாலா பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
*
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கடலை மாவு - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் பேபி உருளைக்கிழங்குகளை குக்கரில் போட்டு, தேவையான அளவு நீர் ஊற்றி, உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து உருளைக்கிழங்கு மென்மையாக வெந்துள்ளதா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
* பின் உருளைக்கிழங்குகளின் தோலுரித்து, உருளைக்கிழங்குகள் பெரிதாக இருந்தால், அதை துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.
* பின்பு ஒரு பௌலில் தயிருடன், உப்பு மற்றும் மசாலா பொடிகளை
சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
* அதன் பின் வேக வைத்துள்ள உருளைக்கிழங்குகளைப் போட்டு நன்கு பிரட்டி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்குகளைப் போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
* பின் அதே வாணலியில் உள்ள எண்ணெயில் சீரகத்தைப் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளுங்கள்.
* அடுத்து எஞ்சியிருக்கும் உருளைக்கிழங்கு ஊற வைத்த தயிர் கலவையை சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வையுங்கள். உங்களுக்கு வேண்டுமானால் அத்துடன் சிறிது உப்பு மற்றும் மிளகாய் தூளை சேர்த்துக் கொள்ளலாம்.
* மறுபுறம்
முந்திரியை சுடுநீரில் போட்டு பத்து நிமிடம் ஊற வைத்து அரைத்து, கிரேவியுடன் சேர்த்து 2 நிமிடம் நன்கு கொதிக்க வையுங்கள்.
* இப்போது வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்குகளை சேர்த்து சில நிமிடங்கள் நன்கு கொதிக்க வையுங்கள்.
* அடுத்து சில கறித்துண்டுகளை நெருப்பில் நன்கு சுட்டு, ஒரு சிறிய பௌலில் போட்டு, அந்த பௌலை கிரேவியின் நடுவே வைத்து, அந்த கறித்துண்டில் நெய் சேர்க்கும் போது புகைக்க ஆரம்பிக்கும். அப்போது உடனே வாணலியை மூடியால் 2 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து கிரேவியின் மேலே
கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான தந்தூரி ஆலு கிரேவி தயார்.
குறிப்பு:
* இந்த கிரேவியை கறித்துண்டுகளைப் புகைக்காமலேயே சாப்பிடலாம். ஆனால் உங்களுக்கு ஹோட்டலில் கொடுப்பது போன்று சுவை இருக்காது.
* இந்த கிரேவிக்கு பேபி உருளைக்கிழங்குகளுக்கு பதிலாக சாதாரண உருளைக்கிழங்குகளையும் பயன்படுத்தலாம். அதற்கு அந்த உருளைக்கிழங்குகளை 3-4 விசில் விட்டு இறக்கி, துண்டுகளாக்கி பயன்படுத்த வேண்டும்.
* உங்களிடம் தந்தூரி மசாலா பவுடர் இல்லாவிட்டால், கரம் மசாலாவுடன் சிறிது உலர்ந்த வெந்தயக் கீரையை சேர்த்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment