தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் மாங்காய் பச்சடி
தேவையான பொருட்கள்:
* பச்சை மாங்காய் - 1
* பாகு வெல்லம் - 1/3 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (வெட்டியது)
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மாங்காயை கழுவி தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை குக்கரில் போட்டு, அத்துடன்
மஞ்சள் தூள் மற்றும் 1/4 கப் நீரை ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அதே சமயம் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் வெல்லத்தைப் போட்டு, அது மூழ்கும் அளவில் நீரை ஊற்றி ஓரளவு கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி பாகு தயாரித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் உள்ள மாங்காயுடன் தயாரித்து வைத்துள்ள வெல்லப் பாகு சேர்த்த
ு அடுப்பில் வைத்து, குறைவான தீயில் ஜாம் பதத்திற்கு வரும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அதற்குள் தேங்காயை மிக்சர் ஜாரில் போட்டு நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த தேங்காய் விழுதை குக்கரில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
* மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து,
குக்கரில் உள்ள மாங்காயுடன் சேர்த்து கிளறி இறக்கினால், மாங்காய் பச்சடி தயார்.
No comments:
Post a Comment