செட்டிநாடு கத்திரிக்காய் சாப்ஸ்
தேவையான பொருட்கள்:
* சின்ன கத்திரிக்காய் - 5
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* வெல்லம் - 2 டீஸ்பூன்
* கெட்டியான புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* கருப்பு எள்ளு விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
* வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 2 டீஸ்பூன்
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 6 பல்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் கத்திரிக்காயை நீரில் கழுவி நீளத் துண்டுகளாக வெட்டி, உப்பு கலந்த நீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், கருப்பு எள்ளு, வேர்க்கடலை ஆகியவற்றைப் போட்டு நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த சீரகம், கருப்பு எள்ளு, வேர்க்கடலை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தைப் போட்டு சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலா, மஞ்சள் தூள், கரம்
மசாலா, மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் கத்திரிக்காய், தக்காளி சேர்த்து, குறைவான தீயில் 2 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் வெல்லம், புளிச்சாறு மற்றும் அரை கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
உங்களுக்குத் தேவையான அளவு நீரை சேர்த்துக் கொள்ளலாம்.
* பிறகு மூடி வைத்து 12-15 நிமிடம் குறைவான தீயில் கத்திரிக்காய் நன்கு மென்மையாகும் வரை வேக வைத்து இறக்கினால், செட்டிநாடு கத்திரிக்காய் சாப்ஸ் தயார்.
No comments:
Post a Comment