Spinach Paneer (ஸ்பினாச் பனீர் ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Thursday, 5 August 2021

Spinach Paneer (ஸ்பினாச் பனீர் )

Spinach Paneer  (ஸ்பினாச் பனீர் )



தேவையான பொருட்கள்: பாலக்கீரை - 1 கட்டு, பனீர் - 250 கிராம், தக்காளி -- 1, வெங்காயம் - 1, பூண்டு - 6 பல், இஞ்சி - 1 இன்ச், பச்சை மிளகாய் - 1. பெருங்காயம் - கால் தேக்கரண்டி, மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி, கடுகு - அரை தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி. வரமிளகாய் - 1, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் வெண்ணை இட்டு, அரை வெங்காயம், 2 பல் பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, மஞ்சள்தூள் போட்டு வதக்கவும். அதனுடன் கீரை சேர்த்து வதக்கி ஆறியதும் மிக்ஸியில் ஒரு சுற்று ஆட்டி எடுக்கவும். கடாயில் வெண்ணை இட்டு, கடுகு, சீரகம், வரமிளகாய், பெருங்காயம், மீதமுள்ள வெங்காயம், பூண்டு, இஞ்சி, அரைத்த கீரை, பனீர் சேர்த்து வதக்கி தக்காளியின் பச்சை வாசனை போனவுடன் இறக்கவும்.

ரிஷி ரவீந்திரன்

பரிமாறும் அளவு: 2 மொத்த கலோரி: 1082, புரதம்: 57, கொழுப்பு: 77, மாவுச்சத்து: 36.

No comments:

Post a Comment