Courgette curry (கோவைக்காய் கறி )
தேவையான பொருட்கள்: கோவைக்காய் - கால் கிலோ, வெங்காயம் - 1, தக்காளி - 1, பூண்டு - 7, இஞ்சி - 1 இன்ச், மிளகு - முக்கால் தேக்கரண்டி, வரமிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு, மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி, மல்லித்தூள் - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, கடுகு - அரை தேக்கரண்டி, பெருங்காயம் - கால் தேக்கரண்டி, வெந்தயம் -
அரை தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, வெண்ணை - 2 மேஜைக்கரண்டி, புளி தண்ணீர் - 1 மேஜைக்கரண்டி செய்முறை: கடாயில் வெண்ணெய் இட்டு வெங்காயம், வரமிளகாய், இஞ்சி, தக்காளி, மல்லித்தூள் சேர்த்து வதக்கவும். அதை மிக்ஸில் அரைக்கவும். கடாயில் வெண்ணெய் இட்டு, கடுகு, சீரகம்,
பெருங்காயம், கறிவேப்பிலை, வெந்தயம், மஞ்சள்தூள், சேர்த்து அத்துடன் கோவைக்காய் சேர்த்து வதக்கவும். அரைத்த மசாலா சேர்த்து உப்பு, புளி நீர் ஊற்றி, நீர் வற்றி, குழம்பு கெட்டியானதும் இறக்கவும்.
- ரிஷி ரவீந்திரன்
பரிமாறும் அளவு: 1 மொத்த கலோரி: 416, புரதம்: 7, கொழுப்பு: 23, மாவுச்சத்து: 3.

No comments:
Post a Comment