Spicy mushroom biryani (ஸ்பைஸி மஷ்ரூம் பிரியாணி ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday 14 August 2021

Spicy mushroom biryani (ஸ்பைஸி மஷ்ரூம் பிரியாணி )

 

Spicy mushroom biryani (ஸ்பைஸி மஷ்ரூம் பிரியாணி )



தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், நறுக்கிய பட்டன் காளான் - ஒரு கப், தக்காளி, வெங்காயம் - தலா 2 |பொடியாக நறுக்கவும்), ரெட் சில்லி சாஸ், சோயா சாஸ் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி டீஸ்பூன், உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - நெய் கலவை, உப்பு - தேவையான அளவு

செய்முறை: அரிசியைக் கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்கவும், வாணணியில் சிறிதளவு நெய் வீட்டு அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். தக்காளியைச் சுடுநீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து, தோலை உரித்து மிக்ஸியில் அடித்துக்கொள்ளவும், குக்கரில் எண்ணெய் - நெய் கலவையைச் சேர்த்து, சூடானதும் பட்டன் காளான் சேர்த்து... இஞ்சி, வெங்காயம், முந்திரி சேர்த்து வதக்கவும். இதனுடன் சில்லி சாஸ், சோயா சாஸ், உப்பு, மினகு - சீரகத்தூள் சேர்த்துக் கிளறி, தக்காளிச் சாறு ஊற்றவும், பிறகு, தேவையான நீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரிசியைப் போட்டுக் கிளறி, குக்கரை 'வெயிட்' போட்டு மூடி 2 விசில் வந்த உடன் நிறுத்தவும், ஆவி யிட்டதும் குக்கரைத் திறந்து, கிளறி சூடாகப் பரிமாறவும்,

No comments:

Post a Comment