Veg Kofta Biryani (வெஜ் கோஃப்தா பிரியாணி)
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பெரிய வெங் காயும் - 2 (வட்டமாக நறுக்கவும்), வாழைக்காய் - ஒன்று, அலசி ஆய்ந்த பசலைக்கீரை (பாலக்கீரை) - அரை கப், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், சர்க்கரை - சிறிதளவு, பிரெட் - 2 ஸ்லைஸ், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்). ஆம்சூர். பவுடர் (மாங்காய்த்தூள்) - ஒரு டீஸ்பூன், மசாலாப்பொடி (பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை பொடித்தது) - ஒரு டீள்யூன், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை 15 நிமிடங்கள் நீரில் ஊற வைத்து, நீரை வடிக்கவும், வாணலியில் சிறிதளவு நெய்விட்டு, சூடானதும் அரிசியைச் சேர்த்து சில நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும், நறுக்கிய பெரிய வெங்காயத்தை எண்ணெயில் பொரித்துக்கொள்ளவும், வாழைக்காயைத் தோல் சீவி மெத்தென்று வேகவைத்து மசித்துக் கொள்ளவும், பிரெட்டைத் தண்ணீரில் முக்கி எடுத்து உடனே பிழிந்து வாழைக்காயோடு சேர்க்கவும். பாலைக்கீரையைப் பொடியாக நறுக்கி கொஞ்சம் சர்க்கரை சேர்த்து சிறிதளவு எண்ணெயில் வதக்கிக்கொள்ளவும்.
அதையும் வாழைக்காயோடு சேர்த்து உப்பு. சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாக உருட்டி சூட்சன எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து வைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு, சூடானதும் பச்சை மினகாய், மசாலாப் பொடி சேர்த்து வதக்கி, தேயையான நீர்விட்டு, கொதிவந்ததும் அரிசியைப் போட்டு, உப்பு, மாங்காய்த்தூள், மிளகாய்த்தூள், மஞ்சன் தூள் சேர்த்துக் கிளறவும், குக்கரை வெயிட் போட்டு மூடி, 2 விசில் வந்ததும் இறக்கவும், ஆவி விட்டதும் குக்கரைத் திறந்து, பொரித்த கோஃப்தா உருண்டைகள் சேர்த்துக் கிறையும். பொரித்த வெங்காயத்தைச் சேர்த்துப் பரிமாறவும்,
No comments:
Post a Comment