மீல் மேக்கர் 65
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் - 1/2 கப்
* இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* மைதா - 1 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* கேசரி பவுடர் - 1 சிட்டிகை
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு 2 நிமிடம் வேக வைத்து, பின் அந்நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசி, எஞ்சியுள்ள நீரை பிழிந்துவிட
வேண்டும்.
* பின்பு ஒரு பௌலில் தயிர், எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், கேசரி பவுடர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் மீல் மேக்கர், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு நன்கு பிரட்டி, 30 நிமிடம் முதல் ஒரு மணிநேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் சோள மாவு மற்றும் மைதா சேர்த்து நன்கு பிரட்டி கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், மீல் மேக்கர் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான மீல் மேக்கர் 65 தயார்.
No comments:
Post a Comment