Cheshwan Fried Rice Biryani (செஷ்வான் ஃப்ரைடு ரைஸ் பிரியாணி )
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், முட்டைகோஸ்
(துருவியது) - கால் கப், டொமேட்டோ கார்லிக் சாஸ் - ஒரு டேபிள் ஸ்பூன், வொர்செஸ்டர்ஷயர் சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், வெங்காயத்தாள் (நறுக்கியது) - கால் கப், குடமிளகாய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பிரியாணி மசாலாப் பொடி - ஒரு டீஸ்பூன், எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: காய்ந்த மிளகாய் - 4, பூண்டுப் பல் - 3, தோல் சீவிய இஞ்சி - சிறிதளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். குக்கரில் 3 கப் நீர் விட்டு உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். அதில் கழுவிய அரிசியைப் போட்டுக் கிளறி பாதி வெந்ததும் அடுப்பை நிறுத்தி, நீரை வடித்து தட்டில்
சாதத்தைக் கொட்டி உதிர்த்துவிடவும். குக்கரில் நெய், எண்ணெய் விட்டு, சூடானதும் அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறி, வெங்காயத்தாள், முட்டைகோஸ், குடமிளகாய் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் பிரியாணி மசாலாப் பொடி, டொமேட்டோ கார்லிக் சாஸ் சேர்த்து... சாதத்தையும் போட்டுக் கிளறவும். பிறகு வோர்செஸ்டர்ஷயர் சாஸ், வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து குக்கரை மூடி, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, 10 நிமிடங்கள் வெயிட் போடாமல் வேகவிட்டு எடுக்கவும்.
No comments:
Post a Comment