Rainbow Biryani (ரெயின்போ பிரியாணி)
தேவையானவை பாசுமதி அரிசி - ஒரு கப், சேப்பங்கிழங்கு - 2, இனிப்பான ஆரஞ்சுபழச் சாறு (ஒரு பெரிய ஆரஞ்சு பழத்தைப் பிழிந்து, விதை நீக்கி, தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்) - இரண்டரை கப், நுருவிய கேரட் பீட்ரூட் - தலா 2 டேபின்ஸ்யூள், வெண்டைக்காய் (வட்டமாக நறுக்கியது) - 2
டேபிள்ஸ்பூன், நக்காளி - 2 (நறுக்கவும்), வேர்க்கடலைப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய சூடமிளகாய் - 2 டேபிள்ஸ்டின், உருளைக்கிழங்கு - ஒன்று (தோல் சீவி, சதுரமாக நறுக்கவும் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்லொய், நெய், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சேப்பங்கிழங்கை வேகவிட்டு தோல் உரித்து வட்ட மாக நறுக்கி உப்பு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்துப் பிசிறி, சூடான எண்ணெயில் பொரித்து வைத்துக்கொள்ளவும். அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்கவும். வாணலி யில் சிறிதளவு நெய்விட்டு அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும். குக்கரில்
எண்ணெய்விட்டு சூடானதும் நறுக்கிய உருளைக்கிழங்கு, குடமினகாய், வெண்டைக்காய், தக்காளி, துருவிய கேரட், பீட்ரூட் சேர்த்து... உப்பு, மிளகாய்த்தூள் போட்டு வதக்கி, நீருக்குப் பதில் ஆரஞ்சுப் பழச்சாறு ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி வேகவிட்டு, வேர்க்கடலைப் பொடி, வறுத்த சேப்பங்கிழங்கு தூவிக் கிளறி பரிமாறவும்.
No comments:
Post a Comment