Brinjal Biryani (பிரிஞ்சால் பிரியாணி )
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பிஞ்சுக் கத்திரிக் காய் - கால் கிலோ (நறுக்கவும்), சின்ன வெங்காயம் - ஒரு கப் (நறுக்கவும்), மஞ்சள்தூன் ஒரு சிட்டிகை, புவித்தண்ணீர் - 2 கப், கடுகு - ஒரு டீஸ்பூன், சிறு நுண்டுகளாக நறுக்கிய முருங்கைக்காய் - அரை கட், தக்காளில் சாறு - கால் கப், கொத்தமல்லித்தழை (ஆய்ந்தது) - ஒரு டேபிள்ஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு அரைக்க: காய்ந்த மிளகாய் - 5. தனியா - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்.
செய்முறை: பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊறயிட்டு, நீரை வடிக்கவும், வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி, அரைக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து, சிறிதளவு உப்பு சேர்த்துப் பொடி செய்துகொள்ளவும்.
குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங் காயம் சேர்த்து வதக்கி... தக்காளிச் சாறு, வறுத்து அரைத்த பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து... நறுக்கிய மத்தரிக்காய், முருங்கைக் காயைர் சேர்த்து வதக்கவும். புளித்தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி, வேயவிட்டு, கொத்தமல்லித் தழை நூவிப் பரிமாறவும்.
No comments:
Post a Comment