Pumpkin Dig Gravy (பரங்கிக்காய் திக் கிரேவி )\
தேவையான பொருட்கள்: பரங்கிக்காய் -- 250 கிராம், தேங்காய் எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி, இஞ்சி - 1 இன்ச், கடுகு - 1 தேக்கரண்டி, தேங்காய் - 1 மேஜைக்கரண்டி, தேங்காய்ப் பால் - 1 கப், மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பரங்கிக்காயை கொஞ்சம் பெரிய துண்டுகளாய் வெட்டிக் கொண்டு அதை ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு நன்றாக வேகும் வரை வதக்கி கொள்ளவும். கொஞ்சம் கொஞ்சமாக அதன் மேல் தண்ணீர் தெளித்து வேகவிட வேண்டும். வெந்த காயில் இஞ்சி, கடுகு, தேங்காய் மூன்றையும் சேர்த்து அரைத்து விட்டு கொஞ்ச நேரம் கொதிக்க விட்டு பின் அதில் தேங்காய் பால் சேர்த்து ஒரு கிளறு கிளறி விட்டு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து பின் உடனே இறக்கி வைக்க வேண்டும்.
- சாந்தி, பேட்டை
பரிமாறும் அளவு: 3
மொத்த கலோரி: 1449, புரதம்: 13, கொழுப்பு: 135, மாவுச்சத்து: 45.

No comments:
Post a Comment