Pepper mushroom (fried) (மிளகு மஷ்ரூம் (வறுத்தது) )
தேவையான பொருட்கள்: காளான் - 250 கிராம், வெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி, வெங்காயம் --1, குடமிளகாய் - 1, பச்சை மிளகாய் - 4, மிளகுப் பொடி - 1 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காளானை நம் தேவைக்கேற்ப வெட்டிக்கொண்டு நன்றாக மண் போக கழுவி உப்பில் பிரட்டி பின் மைக்ரோவேவ் ஓவன் கிரில் மோடில் 20 நிமிடம் வைக்கவும். நீர் வற்றி மஷ்ரூம் நன்றாக காய்ந்தவுடன் அதனை ஒரு தட்டில் கொட்டி விடவும். பின்பு ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம், குட மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, காளான், உப்பு சேர்த்து, மிளகு பொடி மேலே தூவி, கொத்தமல்லி இலையும் தூவி பரிமாறவும்.
-டாலி பாலா
பரிமாறும் அளவு: 1
மொத்த கலோரி: 297, புரதம்: 12, கொழுப்பு: 12, மாவுச்சத்து: 32.

No comments:
Post a Comment