Pineapple Dumbledore Biryani (பைனாப்பிள் டம்ளிங் பிரியாணி )
தேவையானவை: பாகமதி அரிசி, அன்னாசிப்பழச் சாறு - தலா ஒரு கப், நறுக்கிய அன்னாசிப்பழந் துண்டுகள் - அரை ப் பனீர் துண்டுகள் - 10, சாக்கரை - அரை டீஸ்பூன், பாதாம் பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், உவர்ந்த திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன், டைமண்ட் கல்கண்டு – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (கீறவும்), கிராம்பு - 2, நெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை,
செய்முறை: பாதாம் பருப்பை சுடுநீரில் ஊறவைத்து, தோல் நீக்கி மையாக அரைத்துக்கொள்ளவும், சர்க்கரையுடன் கொஞ்சம் நீர் சேர்த்து, அன்னாசிபழத் துண்டுகளைப் போட்டு வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். அரிசியைக் கழுவி, ஊறவைக்காமல் நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். குக்கரில் அன்னாசிபழச் சாறு, ஒன்றரை கப் நீர் விட்டு சூடாக்கி, நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் உப்பு,
கல்கண்டு சேர்த்து, அடுப்பைக் குறைந்த நீயில் வைத்து..அரிசி, அன்னாசிப்பழத் நுண்டுகள் சேர்த்துக் கலக்கி, அரைத்த பாதாம் விழுதைச் சேர்த்துக் கிளறவும். குக்கரை மூடி, சாதம் வெந்ததும் இறக்கவும். வாணலியில் நெய் ஊற்றி, சூடானதும் பச்சை மிளகாய், கிராம்பு, உலர்ந்த நிராட்சை, ஏலக்காய்த்தாள், பனீர் துண்டுகள் சேர்த்து வதக்கி, வெந்த சாதத்துடன் சேர்த்துக் கிளறி பரிமாறவும். இனிப்பு, காரம், உப்பு சேர்ந்து வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த பிரியாணி
No comments:
Post a Comment