Spinach Fry (தண்டுக்கீரை பொரியல் )
தேவையான பொருட்கள்: தண்டுக் கீரை - 1 கட்டு (175 கிராம்), தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, மிளகாய் - 1, வெங்காயம் - 1, பூண்டு - 3 பல், மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, தேங்காய்த் துருவல் - 1 மேஜைக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதோடு வெங்காயம் மற்றும் பூண்டு பல் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அரிந்த கீரையை போட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். கீரை வதங்கியதும் வாணலியை அடுப்பில் இருந்து இறக்கி கீரையோடு தேங்காய் துருவல் சேர்த்து உண்ணலாம். - சாந்தி, பேட்டை பரிமாறும் அளவு: 1 மொத்த கலோரி: 364, புரதம்: 10, கொழுப்பு: 17, மாவுச்சத்து: 29. |
No comments:
Post a Comment