paneer-gulab-jamun-recipe பன்னீர் குலாப் ஜாமூன் - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Tuesday, 31 August 2021

paneer-gulab-jamun-recipe பன்னீர் குலாப் ஜாமூன்

Paneer Gulab Jamun Recipe In Tamil

பன்னீர் குலாப் ஜாமூன்


தேவையான பொருட்கள்:

* பன்னீர் - 1 கப் (உதிர்த்தது)

* மைதா - 3 டேபிள் ஸ்பூன்

* பேக்கிங் சோடா/சமையல் சோடா - 1 சிட்டிகை

* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

சர்க்கரை சிரப் செய்வதற்கு...

* சர்க்கரை - 1 கப்

* தண்ணீர் - 1 கப்

* குங்குமப்பூ - 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் சர்க்கரையைப் போட்டு அடுப்பில் வைத்து, 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். சர்க்கரை கலவை ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் குங்குமப்பூவை சேர்த்து கலந்து இறக்கி, மற்றொரு பாத்திரத்தில் ஊற்றி, குளிர வைக்க வேண்டும்.


* ஒரு உதிர்த்து வைத்துள்ள பன்னீரை நன்கு கையால் மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின் அதில் மைதா மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து, வெதுவெதுப்பான சர்க்கரை சிரப்பில் போட்டு 1 மணிநேரம் ஊற வைத்தால், சுவையான பன்னீர் குலாம் ஜாமூன் தயார்....

No comments:

Post a Comment