ராகி பக்கோடா
தேவையான பொருட்கள்:
* ராகி மாவு - 1 கப்
* சாம்பார் வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 5
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைகேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம், பொடியாக நறுக்கிய வரமிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை மற்றும்
தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது நீர் ஊற்றி, உதிரி உதிரியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள கலவையை, எண்ணெயில் உதிர்த்து விட்டு,
பொரித்து எடுத்தால், சுவையான ராகி பக்கோடா ரெடி!
குறிப்பு:
* விருப்பமுள்ளவர்கள் ராகி பக்கோடா மாவுடன் சிறிது பொட்டுக்கடலையும் சேர்த்துக் கொள்ளலாம்.
* அதேப் போல் கொத்தமல்லியையும் ராகி பக்கோடா தயாரிக்கும் போது சேர்த்துக் கொள்ளலாம். இது இன்னும் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
No comments:
Post a Comment