பாசிப்பருப்பு டிக்கி
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 1 கப்
* பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை குடைமிளகாய் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 1/4 கப் (வேக வைத்து மசித்தது)
* பன்னீர் - 1/4 கப் (துருவியது)
* புதினா - சிறிது
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகப் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
*
மாங்காய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சாட் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை குக்கரில் போட்டு, அதில் 1/2 கப் நீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி, அடுப்பில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து,
பருப்பில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பெரிய பௌலில் பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு, குடைமிளகாய், பன்னீர், புதினா மற்றும் வேக வைத்துள்ள பாசிப் பருப்பை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதே பௌலில் சோள மாவு, சீரகப் பொடி, உப்பு, மாங்காய் தூள், மிளகுத் தூள் மற்றும் சாட் மசாலா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை சிறு உருண்டைகளாக உருட்டி, டிக்கி போன்று தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி தட்டி வைத்துள்ள டிக்கிகளை போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பாசிப்பருப்பு டிக்கி தயார்.
குறிப்பு:
* மாங்காய் தூள் இல்லாதவர்கள்,
அதற்கு பதிலாக புளிப்பிற்கு எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment