ஆந்திரா ஸ்டைல் சேப்பங்கிழங்கு ஃப்ரை
தேவையான பொருட்கள்:
* சேப்பங்கிழங்கு - 500 கிராம்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் சேப்பங்கிழங்கை குக்கரில் போட்டு, அதில் 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* பின் குக்கரில் உள்ள நீரை வெளியே ஊற்றிவிட்டு, கிழங்குகளை
துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து பத்து நொடிகள் தாளிக்கவும்.
* பிறகு அதில் துண்டுகளாக்கப்பட்ட கிழங்குகளை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் மாங்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* மசாலா பொடிகள் கிழங்குடன் நன்கு ஒன்று சேரும் வரை மற்றும் மொறுமொறுப்பாகும் வரை நன்கு கிளறி
விட்டு இறக்கினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் சேப்பங்கிழங்கு ஃப்ரை தயார்.
No comments:
Post a Comment