பாலக் சிக்கன்
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 350 கிராம்
* பாலக் கீரை - 300 கிராம்
* ஓமம் - 1 டீஸ்பூன்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 6 பல்
* ஏலக்காய் - 2
* பட்டை - 2 இன்ச்
* கிராம்பு - 3
* இஞ்சி - 2 இன்ச்
* பச்சை மிளகாய் - 2
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* மிளகாய் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* பிரஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாலக் கீரை, பச்சை மிளகாய், 2 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து குக்கரை மூடி,
ஒரு விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் உடனே குக்கரின் விசிலை எடுத்துவிட்டு திறக்க வேண்டும். இதனால் பாலக் கீரை நிறம் மாறாமல் பச்சை பசேலென்று இருக்கும்.
* பாலக் கீரை நன்கு குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், ஓமம், கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு இஞ்சி, பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அதன் பின் சிக்கனை சேர்த்து, உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
*
பின் வாணலியை மூடி வைத்து, குறைவான தீயில் சிக்கனை நன்க வேக வைக்க வேண்டும். தேவைப்பட்டால் சிக்கன் வேகும் அளவு சிறிது நீர் சேர்த்து சிக்கனை வேக வைத்துக் கொள்ளலாம்.
* இறுதியில் அரைத்த பாலக் கீரை மற்றும் பிரஷ் க்ரீம் சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் 4-5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான பாலக் சிக்கன் தயார்.
No comments:
Post a Comment