லால் பன்னீர்
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம்
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பட்டை - 1
* சீரகம் - 1 டீஸ்பூன்
*
தக்காளி - 2 (பெரியது மற்றும் அரைத்துக் கொள்ளவும்)
* இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் பன்னீரை எடுத்து, சோள மாவில் பிரட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் காஷ்மீரி மிளகாயை தூளை நீர் சேர்த்து ஓரளவு விழுதாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
பிரியாணி இலை, பட்டை, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள் விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வேக வைக்கவும்.
* பின் இஞ்சி விழுதை சேர்த்து கிளறி, அரைத்த தக்காளியை ஊற்றி பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சீரகப் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, சிறிது நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியை மேலே தூவினால்,
லால் பன்னீர் தயார்.
குறிப்பு:
* பன்னீரை உங்களுக்கு எப்படி வேண்டுமோ அந்த வடிவத்தில் வெட்டிக் கொள்ளலாம்.
* கரம் மசாலா பவுடரை சேர்ப்பது, நல்ல ப்ளேவரைத் தரும்.
* வேண்டுமானால் இஞ்சி விழுதிற்கு பதிலாக இஞ்சி பூண்டு விழுதை சேர்த்துக் கொள்ளலாம்.
* விருப்பமுள்ளவர்கள் தக்காளியை சேர்ப்பதற்கு முன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment