ரெஸ்டாரண்ட் ஸ்டைல் காஷ்மீரி தம் ஆலு
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு/ஆலு - 4
* தயிர் - 1 கப்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சுக்கு பவுடர் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
*
சோம்பு பவுடர் - 2 டீஸ்பூன்
* மைதா - 2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு - 3
* கருப்பு ஏலக்காய் - 2
* பச்சை ஏலக்காய் - 2
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
* நெய் - 1 டீஸ்பூன்
* கறித்துண்டு
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்குகளை தோலுரித்துவிட்டு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
*
பின்னர் அதை உப்பு நீரில் போட்டு அடுப்பில் வைத்து, உருளைக்கிழங்கை வேக வைத்து இறக்கி, நீரை வடித்து விட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், வேக வைத்த உருளைக்கிழங்குகளை போட்டு, பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் தயிரை எடுத்து, அத்துடன் மசாலா பொடிகள், மைதா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிராம்பு, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், மிளகு, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் தயிர் கலவையை ஊற்றி, 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் நீரை சிறிது ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் எண்ணெயில் பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து கிளறி, குறைவான தீயில்
மூடி வைத்து 5 முதல் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு கறித்துண்டை நெருப்பில் வைத்து 5 நிமிடம் சூடேற்ற வேண்டும். அதே சமயம் ஒரு அலுமினியத்தாளை கப் போன்ற வடிவில் தயாரித்து, கிரேவியின் மேல் வைத்து, சூடேறிய கறித்துண்டை அதில் வைத்து, அந்த கறித்துண்டின் மேல் நெய் ஊற்றி, 2 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
* பின்னர் மூடியைத் திறந்து கிரேவியில் உள்ள கறித்துண்டை நீக்கிவிட்டு, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், காஷ்மீரி தம் ஆலு தயார்.
No comments:
Post a Comment