coconut milk (ஆடி தேங்காய் பால்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Monday, 16 August 2021

coconut milk (ஆடி தேங்காய் பால்)


ஆடி தேங்காய் பால்


தேவையான பொருட்கள்:

* துருவிய தேங்காய் - 1 கப்

* வெதுவெதுப்பான நீர் - 2 கப்

* வெல்லம் - 1/2 கப்

* நெய் - 3 டீஸ்பூன்

* ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

* முந்திரி - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காயை போட்டு, ஒரு கப் வெதுவெதுப்பான நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை வடிகட்டி பயன்படுத்தி, தேங்காய் பாலை வடிகட்டிக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு கப் கெட்டியான தேங்காய் பால் கிடைக்கும். இதை ஒன்றாம் பால் என்று கூறுவோம்.

* பின்னர் வடிகட்டியில் உள்ள அரைத்த தேங்காயை மீண்டும் மிக்சர் ஜாரில் போட்டு, அதில் மீதமுள்ள ஒரு கப் வெதுவெதுப்பான நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதையும் வடிகட்டியில் வடிகட்டி, ஒரு கப் தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை இரண்டாம் பால் என்று கூறுவோம்.

* பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, அதில் 1/4 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை உருக வைக்க வேண்டும்.

* வெல்லம் நன்கு உருகியதும், அதை இறக்கி, வடிகட்டி பயன்படுத்தி வெல்லப்பாகுவை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த வடிகட்டி வெல்லப்பாகு பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து, அதில் இரண்டாம் தேங்காய் பாலை ஊற்றி 3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதில் ஒன்றாம் தேங்காய் பாலை ஊற்றி அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கிவிட வேண்டும்.

* அடுத்து அதில் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* இறுதியாக ஒரு சிறிது வாணலியில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து அதில் ஊற்றி கிளறினால், சுவையான ஆடி பால் அல்லது ஆடி தேங்காய் பால் தயார்.

No comments:

Post a Comment